இந்திய இணையத்தளங்கள் மீதும், செயற்கைக் கோள் மீதும் சீனா தாக்குதல்.. எந்த நாட்டு செயற்கைக் கோளை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ சீனாவால் முடியும் என தகவல்
இந்திய இணையத் தளங்கள் மீது சீனா பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2007க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய செயற்கைக்கோள், இணைய தளங்கள் மற்றும் தகவல்தொடர்புகள் பலமுறை குறிவைக்கப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், எதிரி நாடுகளுக்கே தெரியாமல் அவர்களின் செயற்கைக் கோளை அழிக்கவோ, கட்டுப்படுத்தவோ சீனாவால் முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தரையில் அமைக்கப்பட்டுள்ள தளத்திலிருந்தே இதுபோன்ற சைபர் தாக்குதல்களைச் செய்யும் திறனை சீனா வைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments