போதைப்பொருள் கடத்தல்.. தீபிகாவுக்கு அக்னி பரீட்சை..! 4 நடிகைகளுக்கு சம்மன் பின்னணி

0 5749

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதையில் திளைத்த பாலிவுட் கனவுக்கன்னிகள், போலீசுக்குப் பயந்து கலங்கி நிற்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

பாலிவுட்டில் கனவுக்கன்னியாக அறியப்பட்டாலும் தமிழில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் லுங்கிடான்ஸ் பாடலுக்கு ஜோடி போட்டதால் மிகப் பிரபலமானவர் நடிகை தீபிகா படுகோன்..!

இந்தியின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை எட்டிப்பிடித்த தீபிகாவுக்கு இது போதாத காலம் என்று தான் சொல்லவேண்டும், போதையால் கலங்கி நிற்கும் கன்னட திரையுலகைத் தொடர்ந்து சுஷாந்தின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரித்தால் அதன் பின்னணியில் மிகப்பெரிய போதைப் பொருள் கும்பல் மறைந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை ரியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்த தகவலை வெளியிட்டார். இதன் அடிப்படையில், நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மூன்று நாட்களுக்குள் ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தான் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் வேலைப்பளு காரணமாக கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட தீபிகா, தனது மேலாளர் மூலம் போதைப்பழக்கத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகின்றது.

உதவியாளரிடம் போதைப் பொருள் கேட்ட தீபிகாவின் குறுந்தகவல் போதைப் பொருள் சப்ளையில் ஈடுபட்ட டிவி நடிகையின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதால், போலீஸ் சம்மனுக்கு ஆஜராகும் தீபிகா படுகோனுக்கு இந்த விசாரணை நிச்சயம் ஒரு அக்னிபரீட்சையாக இருக்கும் என்கின்றனர் திரைஉலகினர்.

இதுவரை விசாரணைக்கு அழைக்கப்பட்ட நடிகைகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வரிசையில் தீபிகா, ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் சிக்குவார்களா ? என்பது போலீஸ் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments