புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்-ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள்
புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இணைய வழியே நடைபெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,உலகை முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவை பொறுப்பாளியாக்க வேண்டுமென்றார்.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீன அதிபர் ஜின்பிங், உலக நடப்புகளில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும், பிற நாடுகளை கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவை மறைமுகமாக சாடினார்.
இந்நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ, புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.
Comments