கொரோனா தடுப்பு மருந்துகள் முறையாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை-WHO

0 2520
கொரோனா தடுப்பு மருந்துகள் முறையாக செயல்படுதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை

உலகம் முழுவதும் பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: பரிசோதனையில் உள்ள எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் முறையாக செயல்படும் என்பதற்கு எங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நாங்கள் அதிக பரிசோதனைகளை மேற்கொள்கிறோம், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். கொரோனாவை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 200 தடுப்பூசி, பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசி வளர்ச்சியின் வரலாற்றில் சில தோல்வியடைந்தாலும், சில தடுப்பு மருந்துகள் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments