சர்வதேச அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா
சர்வதேச அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த 20 லட்சம் பேரில் அதிகபட்சமாக 38 சதவிகிதம் பேர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வாரத்தில் இறப்பு எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments