எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவர் சங்கேத் மேத்தா, இயல்பு நிலைக்கு திரும்பினார் - எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை

0 1987

எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்ட சூரத் மருத்துவர் சங்கேத் மேத்தா, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதுடன், நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும் நிலைமையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சூரத் மருத்துவமனை ஒன்றில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது ஆக்சிஜன் கருவியை கொரோனா நோயாளி ஒருவருக்கு பொருத்தி பிரபலமானவர் டாக்டர் சங்கேத் மேத்தா.

அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட தொடர் சிகிச்சை காரணமாக எக்மோ கருவி அகற்றப்பட்டு 100 சதவிகித ஆக்சிஜனை எடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments