ராமேஸ்வரத்தில் வாகனங்களில் அடிபட்டு மடியும் வண்ணத்துப்பூச்சிகள்...
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியே செல்லும் வாகனங்களில் அடிபட்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் உயிரிழந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவைப் பூர்விகமாகக் கொண்டவை கிரிம்ஸன் ரோஸ் வகை வண்ணத்துப் பூச்சிகள். இவை, ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே முள் மரங்கள் நிறைந்த பகுதிகளில் அதிகம் வசிக்கின்றன. வண்ணத்துப்பூச்சிகள் மரங்களின் மகரந்த சேர்க்கைக்குத் துணை புரிவதால், இவை இயற்கையின் பாதுகாவலனாகத் திகழ்கின்றன.
காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பாம்பன் பாலம் சாலையில் வட்டமடிப்பது வழக்கம். அப்போது அந்த வழியாக வேகமாகச் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறப்பைத் தழுவுகின்றன.
வாகனங்களில் அடிபட்டு பட்டாம்பூச்சிகள் மடிவதைத் தடுக்க, தடுக்க வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்க வேண்டுமெனவும், வண்ணத்து பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் வனத்துறையினருக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments