டொயோட்டா நிறுவனத்தின் புதிய எஸ்யுவி ரக கார் அறிமுகம்
டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூசர் என்ற பெயரில் புதிய எஸ்யுவி ரக காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மாருதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் விதாரா பிரெஸ்சா மாடலில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 11 லட்சத்து 30 ஆயிரம் வரை உள்ளது.
கியா சோனட், ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யு, மகிந்திராவின் எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களுக்கு இது போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நகர்ப்புறங்களில் எஸ்யூவிர ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அத்தகைய மாடலில் புதிய கார்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
— Toyota India (@Toyota_India) September 23, 2020
Comments