மலேசியாவில் புதிய அரசை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மை தம்மிடம் உள்ளது-அன்வர் இப்ராஹிம்
மலேசியாவில் புதிய அரசை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மை தம்மிடம் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பிரதமர் முஹியுத்தீன் யாசினின் தலைமையில் விருப்பம் இல்லாத பல கட்சி எம்பிக்கள் தம்மை தொடர்பு கொண்டு ஆட்சி அமைக்குமாறு கேட்டுக்கொண்டதாக கோலாலம்பூர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
மலேசியாவில் 2018 ல் நடந்த தேர்தலில் தோற்ற கட்சிகளுடன், ஆளுங்கட்சியான பகட்டான் ஹரப்பான் கூட்டணி எம்பிக்கள் சேர்ந்து கொண்டதை அடுத்து பிரதமராக இருந்த 95 வயது மகாதிர் முகம்மது ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் குழப்பங்களுக்குப் பிறக் கடந்த மார்ச்சில் முஹியுத்தீன் யாசின் பிரதமராக பதவி ஏற்றார்.
Malaysia opposition leader Anwar says seeking to form new government https://t.co/YRPXH6aYb8 pic.twitter.com/VepSs16aVx
— Reuters (@Reuters) September 23, 2020
Comments