எம்எல்ஏ அலுவலகத்துக்குள் புகுந்து கடத்தப்பட்ட அதிமுக பிரமுகர் மீட்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து பட்டப் பகலில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பிரமுகர் சில மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.
இன்று காலை சுமார் 11 மணியளவில் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் கர்ணன் இருந்தபோது, வெள்ளை நிற காரில் வந்த 4 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றை காட்டி கடத்திச் சென்றனர்
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், தளி என்ற இடத்தில் கர்ணன் இறக்கிவிடப்பட்டிருப்பதை கண்டுபிடித்து போலீசார் மீட்டனர். எதனால் முகமுடி கும்பல் கடத்திச் சென்றது, அக்கும்பலில் இருந்தோர் யார் என்பது உள்ளிட்டவை குறித்து கர்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments