சானிட்டசைர் கொண்டு டி.வி-யை துடைத்ததில் பழுது... பெற்றோருக்கு பயந்து சிறுவன் தற்கொலை

0 28661

குன்றத்தூரில் சானிட்டசைர் கொண்டு துடைத்ததில் டி.வி ரிப்பேர் ஆனதால் பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில்  14 வயது பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல் . இவர் , தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வடிவேலுவின்  மனைவி கவிதாவும் தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இவர்களது மகன் பிரைட் ஷாம்( வயது 14) அங்குள்ள பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா காரணமாக சிறுவன் மட்டும் வீட்டில் இருந்தான்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த பிரைட் சாம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில் நண்பனை தேடி வந்த பிரைட் சாமின் நண்பர்கள் அவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்தனர். தொடர்ந்து ,அக்கம் பக்கத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டுக்கு வந்த பெற்றோர் பிரைட் சாமை தூக்கி கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குன்றத்தூர் போலீசார் பிரைட் சாமின் நண்பர்களிடத்தில் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த டி.வி யை சிறுவன் சானிடைசர் கொண்டு துடைத்துள்ளான். அப்போது , டி.வி பழுதடைந்து உடைந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது. இதனால், பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் பிரைட் சாம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments