தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4396
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11:30 மணி வரை 3.5 மீட்டர் உயரம் முதல் 3.7 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments