கொரோனா தடுப்பு மருந்துகள் குறைந்தது ஐம்பது விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருக்க வேண்டும் -மருந்துக் கட்டுப்பாட்டாளர் வழிகாட்டுதல்

0 1383
கொரோனா தடுப்பு மருந்துகள் குறைந்தது ஐம்பது விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருக்க வேண்டும் என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டாளர், அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்துகள் குறைந்தது ஐம்பது விழுக்காடு செயல்திறனைக் கொண்டிருக்க வேண்டும் என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டாளர், அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் பாதுகாப்பு, நோய் எதிர்ப்பாற்றல், செயல் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு தடுப்பு மருந்தைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கு அது மூன்றாம் கட்டச் சோதனையில் குறைந்தது ஐம்பது விழுக்காடு செயல் திறனைக் கொண்டிருக்க வேண்டும் எனக் குறப்பிட்டுள்ளது.

கருவுற்ற பெண்கள், பேறுகாலத்தை எதிர்நோக்கியுள்ள பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு தடுப்பு மருந்துகளை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments