வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நில அபகரிப்பு புகாரில் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் கைது
வேளாங்கண்ணகி பேராலயத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரித்த புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நாகை மாவட்டம் கீழையூர் திமுக நிர்வாகியை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கீழையூர் ஒன்றிய செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் மீது அதிமுக நகர செயலாளர் தங்க.கதிரவன் புகார் அளித்திருந்தார். அதில் வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோயில், புனித வேளாங்கண்ணி திருத்தல பேராலயம் உள்ளிட்டவற்றுக்கு சொந்தமான சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து எடிசன் அபகரித்து இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதன்பேரில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிய நிலையில், எம்எல்ஏக்கள் விடுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து நாகைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
Comments