3 ஆண்டுகளில் விலை குறைவான மின்சார கார்கள் உருவாக்கப்படும் - டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்
இன்னும் 3 ஆண்டுகளில் சுமார் 18 லட்சம் ரூபாய் விலையில் மலிவான மின்சார கார்களை தயாரிக்கப் போவதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மின்சார கார் தயாரிப்பில் பேட்டரிகளின் விலை அதிகம் என்பதால் அதை குறைக்க தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரம் இது தொடர்பான முக்கிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பை அவர் வெளியிடுவார் என காத்திருந்த டெஸ்லா முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் டெஸ்லாவின் பங்குகள் 7 சதவிகித சரிவை சந்தித்தன. டெஸ்லாவின் S Long Range Plus கார்கள் ஒருமுறை மின்னோட்டம் செய்தால் 400 மைல் வரை ஓடும் திறன் வாய்ந்தவை. இதனால் டெஸ்லா மின்சார கார் மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக திகழ்கிறது.
Comments