டிவி நடிகை அனிகாவிடம் போதைப் பொருள் வாங்கியதாக தகவல், நடிகை தீபிகா படுகோனேவிற்கு விரைவில் சம்மன்..?
கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைதான டிவி நடிகை அனிகாவிடம் இந்தி நடிகை தீபிகா படுகோனே போதை பொருள் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பானஸ்வாடியில் கைதான அனிகாவிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வாட்ஸ் அப் சேட்டிங் மூலம் தொடர்பு கொண்டு தீபிகா போதை பொருள் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ் அப் சேட்டிங்குக்காக டி.எஸ்.என்.ஜே.கே என்ற சங்கேத வார்த்தைகளை (கோர்டு வேர்டை) பயன்படுத்தியதாகவும், இதில் டி என்றால் தீபிகா , எஸ் - ஸ்ரத்தா கபூர் , என் என்றால் ஹர்ஷா நம்ருதா, ஜே.கே என்றால் ஜெயா சாஹா எனவும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தீபிகாவுக்கு எந்நேரமும் விசாரணைக்காக சம்மன் அனுப்பக்கூடும் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.
Comments