அமெரிக்காவின் ”கோவிட் 19 தடுப்பூசி” மருந்து உற்பத்தியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது

0 70987
அமெரிக்காவின் ”கோவிட் 19 தடுப்பூசி” மருந்து உற்பத்தியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தொடங்கியுள்ளது

புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட் அமெரிக்காவின் கோடஜெனிக்ஸ் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள CDX-005 என்ற கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.

உலகின் மிகப் பெரிய மருந்து தயாரிப்பான சீரம் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பு மருந்தையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மனிதர்களுக்கு செலுத்தி மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 150 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments