பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்களுடன் ராணுவத் தளபதி ரகசிய சந்திப்பு
பாகிஸ்தானில் எதிர்கட்சித் தலைவர்களுடன் ராணுவத் தளபதியும், உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தளபதியும் ரகசிய ஆலோசனை நடத்தினர்.
அங்கு அனைத்துக் கட்சி மாநாடு நடக்க உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் கமர் ஜாவித் பஜ்வாவும், ஐஎஸ்ஐ அமைப்பின் தளபதி பயாஸ் ஹமீத்தும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதில் முக்கிய எதிர்க்கட்சிகளான தேசிய பேரவையின் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் புட்டோ ஜர்தாரி பங்கற்றதாகவும் தி டான் பத்திரிகை தெரிவித்துள்ளது. அப்போது பிரதமருடனான அரசியல் வேறுபாடுகளுக்கு ராணுவத்தின் பெயரை இழுப்பதைத் தவிர்க்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
Comments