சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 72 ரன்களையும், கேப்டன் ஸ்மித் 69 ரன்களையும் குவித்தனர்.
கடைசி ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 சிக்சர்களை விளாச, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைக் குவித்தது.
217 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில், சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. மறுபுறம் அதிரடியாக ஆடிய பாப் டூப்ளசிஸ் 72 ரன்களைக் குவிக்க, கேப்டன் தோனி 29 ரன்களை சேர்த்தார்.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
Comments