ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி சில வாரங்களில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் - டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம் தகவல்
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற கொரோனா தடுப்பூசி, அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்படும் என்று டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரின் அனுமதி கிடைத்ததும், இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி பரிசோதனை நடைபெறும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் சப்ரா தெரிவித்தார்.
ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் வரையிலான தன்னார்வலர்கள் இந்த சோதனையில் பங்கேற்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவில் இருந்து 10 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து அடுத்த ஆண்டிருந்தே கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments