தர்ணாவில் ஈடுபட்ட எம்பிக்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அளித்த தேநீரை ஏற்க மறுத்துவிட்டனர்
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சஸ்பெண்ட் எம்பிக்கள் 8 பேரும், மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் அளித்த தேநீரை ஏற்க மறுத்துவிட்டனர்.
வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது அமளியில் ஈடுபட்டதற்காக ஒருவார காலத்திற்கு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே 2ஆவது நாளாக தர்ணாவில் ஈடுபட்ட அவர்களுக்கு ஹரிவன்ஸ் இன்று காலை தேநீர் பரிமாறினார்.
ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்ட நிலையில் ஹரிவன்ஸ் நாளை காலை வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்த நிலையில், மாநிலங்களவையை புறக்கணித்துள்ள எம்.பி.க்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வசதியாக, 8 பேரும் தர்ணாவை முடித்துக் கொண்டனர்.
Comments