அமெரிக்காவுடன் கைதிகளை பரிமாறிக் கொள்ளத் தயார் என ஈரான் அறிவிப்பு

0 1892
அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித் கூறுகையில், அமெரிக்காவுடன் அனைத்து கைதிகள் பரிமாற்றத்துக்கு ஈரான் தயாராக உள்ளது என்றார்.

அமெரிக்க சிறைகளில் ஈரானியர்கள் தொடர்ந்து உள்ளனர் என்றும், அவர்கள் தங்கள் நாட்டை காட்டி கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் கூறினார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை கைதிகள் பரிமாற்ற முறையில் பரிமாறிக் கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈரானில் உள்ள அமெரிக்க கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments