டிக்டாக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்தை சீனா ஏற்க வாய்ப்பில்லை- சீன அரசு பத்திரிக்கை தகவல்
டிக்டாக் செயலியை, அமெரிக்காவின் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுக்கு விற்கும் முடிவை, சீன அரசு ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என, குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
டிக்டாக்கை இந்த நிறுவனங்களுக்கு, அமெரிக்கர்கள் இடம் பெற்றுள்ள டிக்டாக் குளோபல் என்ற நிறுவனத்தின் வாயிலாக விற்க டிக்டாக்கின் உரிமையாளரான ByteDance திட்டமிட்டுள்ளது. டிக்டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு மட்டுமே விற்க வேண்டும் என அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆனால் டிக்டாக் குளோபலில் தங்களது ஆதிக்கம் இருக்கும் என ByteDance கூறும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களோ தங்களது முதலீட்டாளர்களிடம் டிக்டாக்கின் உரிமை இருக்க வேண்டும் என கூறியுள்ளன.
இதனிடையே டிக்டாக் நிர்வாகத்தில் ஒரே ஒரு சீனருக்கு மட்டுமே இடம் உண்டு என்பதுடன், அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான இயக்குநர் ஒருவரும் அதில் இடம் பெறுவார் என்பதை சீனா ஏற்காது என்றும் கூறப்படுகிறது.
விற்பனை ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மற்றும் சீன அரசுகளின் ஒப்புதல் அவசியம் என்பதால் இந்த விற்பனை நடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
Comments