புதிய கல்வி கொள்கையால் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் - பிரதமர் மோடி

0 1760
புதிய கல்வி கொள்கை மூலம், சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கை மூலம், சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்றார்.

உங்களின் கனவுகள் தான், இந்தியாவை உருவாக்கப்போகிறது என்ற அவர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது என்றார்.

சர்வதேச கல்வி மையமாக, இந்தியாவை தேசிய கல்வி கொள்கை உருவாக்கும் என்றும்,  சிறப்பாக செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகள் துவங்க ஊக்கமளிக்கப்படும் என்றும் இதற்கு ஐஐடி கவுகாத்தி முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments