கில்லி, தூள் படத்தில் நடத்த நடிகர் ரூபன் கொரேனா பாதித்து மரணம்!

0 16413
நடிகர் ரூபன்

மிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் அறியப்பட்ட  ரூபன் நேற்று கொரோனா நோய்த் தொற்று காரணமாக மரணமடைந்தார். 

விக்ரம் நடித்த 'தூள் 'படத்தில் டி.டி.ஆர் கதாபாத்திரத்திலும், விஜய்யின் கில்லி படத்தில் கபடி போட்டி நடுவராகவும் நடித்திருப்பவர் ரூபன்.  சில படங்களுக்குக் கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார். சினிமா எழுத்தாளராக இருந்துகொண்டே வாய்ப்பு கிடைக்கும் போது திரையிலும் தோன்றி நடித்து வந்தார். 

தற்போது  54 வயதாகும் ரூபன், நுரையீரல் புற்றுநோய் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் ரூபன் உயிரிழந்தார். 

மறைந்த ரூபனுக்கு  சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் இல்லை. ரூபன் மறைவிற்கு சினிமா துறையினர் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடன் பணியாற்றிய இயக்குனர்கள், எழுத்தாளர்கள் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ரூபனின் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments