குறைந்தபட்ச ஆதார விலை என எந்தப் பிரிவும் புதிய வேளாண் சட்டத்தில் இல்லை - மு.க.ஸ்டாலின்
குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என்று குறிப்பிட்டு எந்தப் பிரிவும் புதிய வேளாண் சட்டத்தில் இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தால் முதலில் பலியாவது மண்டிகளும், வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறை கூடங்களும், உழவர் சந்தைகளும்தான் என அவர் கூறியுள்ளார்.
பண்ணை ஒப்பந்தம் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைகளாக்குகிறது என குறை கூறியுள்ள மு.க.ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் மூலம் பதுக்கல் ஊக்குவிக்கப்படும் என கூறியுள்ளார்.
எவ்வளவு வேண்டுமானாலும் விளை பொருட்களை கார்ப்பரேட் கம்பெனிகள் பதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தாராளமயம் செய்யப்பட்டு விட்டது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments