புலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமை , ஜிடிபி உள்ளிட்ட எந்த தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது - சசி தரூர்
புலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமை, விவசாயிகளின் தற்கொலை, கொரோனாவுக்கான பொருளாதார உதவி, கொரோனா மரண எண்ணிக்கை, ஜிடிபி பற்றிய தகவல் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசிடம் எந்த தரவுகளும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திரும்ப திரும்ப ஒப்புக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
எனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, NDA என்பதை No Data Available என கிண்டல் செய்துள்ள அவர் அது பற்றிய கார்ட்டூன் ஒன்றையும் தமது டுவிட்டர் பதிவில் இணைத்துள்ளார்.
No #data on migrant workers, no data on farmer suicides, wrong data on fiscal stimulus, dubious data on #Covid deaths, cloudy data on GDP growth — this Government gives a whole new meaning to the term #NDA! pic.twitter.com/SDl0z4Hima
— Shashi Tharoor (@ShashiTharoor) September 22, 2020
Comments