அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் ஐ.சி.யுவில் இரு முதியவர்கள் உயிரிழந்த புகாருக்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருவர் உயிரிழந்ததாக புகாரெழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார்.
அங்கு காலை 11 மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடைவெளியில் ஐ.சி.யு வில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
மின் தடை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாலேயே அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால் மின் தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் எவ்விதமான தடையும் ஏற்படவில்லை என்றும் நோயின் தீவிரம் காரணமாகவே இருவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
Comments