அத்தியாவசிய பொருட்கள்-திருத்தச்சட்டம்

0 2508
அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி  தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியன அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

கடந்த 15 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு வாயிலாக நிறைவேறியது. இதன்படி தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியன அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

அத்துடன் வேளாண் கட்டமைப்பில் முதலீடுகளை தடுக்கும் வகையில் இருந்த ஸ்டாக் உச்சவரம்பு நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. அறுபத்தைந்து ஆண்டுகளாக இருந்த பழைய சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம், இயற்கை பேரழிவுகள், விலையுர்வு போன்ற காலகட்டங்களில் மட்டுமே இனி அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பு இருக்கும்.

அதே நேரம் வேளாண் விளைபொருட்களை பதப்படுத்துவோருக்கும், அவற்றை வைத்து அடுத்த கட்ட பொருட்களை தயாரிப்பவர்களுக்கும் இந்த உச்சவரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தத்தின் வாயிலாக வேளாண்துறையில் புதிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படுவதுடன், அறுவடையான பயிர்கள் அழியாமல் காக்கும் வகையில் கூடுதல் கிட்டங்கி வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் சந்தைப்படுத்துதலில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் இந்த சட்டதிருத்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments