தைவான் நீரிணை பகுதியில் சீன போர்விமானங்கள் பலமுறை பறந்து பதற்றத்தை உருவாக்குவதாக தைவான் குற்றசாட்டு
தைவான் நீரிணை பகுதியில் சீன போர்விமானங்கள் பலமுறை பறந்த நிலையில், அங்கு திட்டமிட்ட பதற்றத்தை சீனா உருவாக்குவதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் தைவான் நீரிணைப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தைவான் அதிபர் சாய்-இங்க்-வென் குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த சில நாட்களாக தைவானுக்கு சீனா ராணுவ மிரட்டல்கள் விடுப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி கேத் கிராச், தைவான் தலைநகர் தைபேயில் அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளால் ஆத்திரமடைந்துள்ள சீனா இந்த ராணுவ நடவடிக்கைகளை நடத்தி மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments