ஆப்பிரிக்காவில் யானைகளின் மர்ம மரணத்திற்க்கு காரணம், நச்சு நீரை அருந்தியதே-ஆராய்ச்சியாளர்கள்
போட்ஸ்வானாவில் நச்சுத்தன்மை கலந்த நீரை அருந்தியதே 300க்கும் மேற்பட்ட யானைகளின் மரணத்திற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இங்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனையடுத்து அங்குள்ள நீர்நிலைகளில் சோதனையிட்ட ஆராய்ச்சியாளர்கள், சயனோபாக்டீரியா என்னும் நச்சுப்பொருள் நீரில் உற்பத்தியானதை கண்டறிந்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் உற்பத்தியான இந்த நச்சுப்பொருளே யானைகளின் மரணத்திற்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments