ஏர்இந்தியாவை வாங்கும் நிறுவனங்களுக்கு மேலும் சில இனிப்பான அறிவிப்புகள்?

0 1592
ஏர்இந்தியாவை வாங்கும் நிறுவனங்களுக்கு மேலும் சில இனிப்பான அறிவிப்புகள்?

ஏர்இந்தியாவை வாங்க திட்டமிடும் நிறுவனங்களுக்கு மேலும் சில இனிப்பான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏர்இந்தியாவை விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டும், கடன்சுமை உள்ளிட்ட காரணங்களால் 2018ஆம் ஆண்டு முதல் அதை வாங்க ஆளில்லை.

இதையடுத்து ஏர்இந்தியா நிறுவனத்தின் கடனை 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 23 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்தது. ஏர் இந்தியாவுடன், ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தையும் விற்க அரசு முன்வந்தது.

இந்நிலையில், விற்பனை நடவடிக்கையை இன்னும் இனிமையானதாக மாற்றும் வகையில், பங்குகள் அடிப்படையிலான சந்தை மதிப்புக்கு பதிலாக, தற்போதுள்ள நிலவரத்திற்கு ஏற்ப சந்தை விலையில் ஏர்இந்தியாவை ஏலம் கோர நிறுவனங்களை அனுமதிக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments