திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி குற்றசாட்டு

0 5360
திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தலை நானும் எதிர்கொண்டேன் : நடிகை கஸ்தூரி குற்றசாட்டு

திரைப்பட துறையில் தாமும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக பிரபல நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக நடிகை பாயல் கோஸ் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டு சட்டத்தின் அடிப்படையில் செல்லுமா என்பது சந்தேகமே என கஸ்தூரி கூறியிருந்தார்.

இதற்கு, உங்களுக்கு நெருக்கமான நடிகை அல்லது உங்கள் தோழி இப்படி ஒரு பாலியல் புகார் கூறினால் அதனை சட்டத்தின் அடிப்படையில் அணுகுவீர்களா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எனது தோழிக்கு என்ன எனக்கே பாலியல் துன்புறுத்தல் அனுபவம் உள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தோரின் பெயர்ளை வெளியிட போவதில்லை என்று தெரிவித்துள்ள கஸ்தூரி,  அவர்கள் செய்த குற்றத்தை தன்னால் நிரூபிக்க முடியாது என்பதே இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments