வீட்டுக்கடன்களை திருப்பி செலுத்த கூடுதலாக 24 மாத அவகாசம்..? - SBI

0 3134
வீட்டுக்கடன்களை திருப்பி செலுத்த கூடுதலாக 24 மாத அவகாசம்..? - SBI

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுக்கடன்தாரர்களுக்கு 24மாத காலம் வரை  தவணை அவகாசத்தை வழங்க பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

மற்றோர் வாய்ப்பாக, கடன் தவணைகளை திருத்தி அமைத்து  தவணை கால அவகாசத்திற்கு மிகாமல் தவணைகளை நீட்டித்து செலுத்தவும் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்னர் பெறப்பட்ட வீட்டுக்கடன்களை, ஊரடங்கு காலத்திற்கு முன்னர் வரை ஒழுங்காக திருப்பிச் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

அதே நேரம் கொரோனாவால் தங்களது வருமானம் அல்லது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments