8 எம்பிக்கள் வருத்தம் தெரிவித்தால் சஸ்பெண்ட்டை வாபஸ் பெறுவது பற்றி பரிசீலனை - பிரகலாத் ஜோஷி
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால், அவர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிப்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவை கூடியதும், 8 எம்பிக்கள் மீதான சஸ்பென்டை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.
மேலும் வேளாண் விளைபொருட்கள் குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும் குறைவாக தனியாருக்கு விற்கப்படமாட்டாது என்ற மசோதாவை கொண்டுவரவும் அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக குலாம் நபி ஆசாத்தின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பென்ட் செய்யப்பட்ட எம்பிக்களை அவையில் அனுமதிப்பது பற்றி விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக கூறினார்.
Comments