போதைப் பொருள் வழக்கு நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் எனத் தகவல்

0 3163
போதைப் பொருள் வழக்கு நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் எனத் தகவல்

போதைப் பொருள் வழக்கில், இந்தி நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு போதைப் பொருள் தடுப்புப் படையினர் சம்மன் அனுப்பக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், இந்தி திரையுலகினர் போதைப் பொருளை பயன்படுத்தியது குறித்து கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு சுசாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபர்த்தி, உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, கரிஷ்மா கபூர், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரிடம் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments