தேசிய ஆட்தேர்வு முகமையின் மூலமான பொதுத் தகுதித் தேர்வு 2021 செப். முதல் தொடங்கும் - மத்திய இணையமைச்சர் தகவல்
தேசிய ஆட்தேர்வு முகமையின் மூலமான பொதுத் தகுதித் தேர்வுகள் அடுத்த ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் நடத்தப்படும் என பணியாளர் நல இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், பணியாளர்கள் தேர்வு ஆணையம், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றின் மூலம் அறிவிக்கப்படும்.
பணியிடங்களுக்கு, தேர்வர்களைப் பட்டியலிட தேசிய ஆட்தேர்வு முகமை மூலம் முதற்கட்ட தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
அதைதொடர்ந்து, பணி நியமனம் என்பது குறிப்பிட்ட வாரியம் அல்லது ஆணையம் மூலம் வழக்கம்போல் நடைபெறும் என்றும், ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Comments