இடதுசாரி தீவிரவாதத்தால் 11 மாநிலங்களில் 90 மாவட்டங்கள் பாதிப்பு - உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி

0 1152
இடதுசாரி தீவிரவாதத்தால் 11 மாநிலங்களில் 90 மாவட்டங்கள் பாதிப்பு - உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி

இடதுசாரித் தீவிரவாதத்தால் 11 மாநிலங்களில் 90 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், நடப்பாண்டு தொடக்கம் முதல் ஆகஸ்ட் வரை நடந்த தாக்குதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 34 பேரும், 68 பொதுமக்களும், 54 தீவிரவாதிகளும் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் 61 மாவட்டங்களிலும், 2020 முதல் பாதியில் 46 மாவட்டங்களிலும் தீவிரவாத நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளைக் கண்காணிக்க ஹெலிகாப்டர்கள், ஆளில்லா உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments