நள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான 6ம் கட்ட பேச்சுவார்த்தை

0 2225
இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றது

இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரு தரப்பிலும் செய்து கொள்ளப்பட்ட 5  அம்ச ஒப்பந்தம் தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, இந்தியா-சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக, ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் இருநாடுகளுக்கு இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், சீனா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம், சீனாவின் அத்துமீறல்களை, இந்தியா தொடர்ந்து வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. அந்த வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே இந்திய பகுதியில் உள்ள 6 முக்கிய மலைச் சிகரங்களை இந்திய ராணுவம் சமீபத்தில் கைப்பற்றி உள்ளது.

இந்த சூழலில், இந்திய-சீன ராணுவ உயரதிகாரிகள் இடையேயான 6ம் கட்ட பேச்சுவார்த்தை, வெளியுறவுத்துறை இணைச்செயலர் நவீன் ஸ்ரீவஸ்தவா முன்னிலையில் நடைபெற்றது.

எல்லைப்பகுதியில் அமைதியை மீட்பது தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி இருநாட்டு எல்லைப்பகுதியான சுஷுல்-மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.

இந்திய ராணுவ தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் பங்கேற்க, சீனாவின் தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பிரிவின் கமாண்டர் லியு லின் முன்னிலை வகித்தார்.

இதில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இரு தரப்பிலும் செய்து கொண்ட 5 அம்ச ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் எல்லையில் படைகளை விலக்கி கொள்ளுதல், பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எல்லை தொடர்பான இரு நாடுகளின் ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது, எல்லையில் அமைதி திரும்ப செய்வது ஆகியவற்றை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments