தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு- அமைச்சர் பியூஷ் கோயல்

0 1618
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு- அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மக்களவையில், மதுரை எம்பி வெங்கடேசனின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் பியூஷ் கோயல் இதைத் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டு முடியும் வரை ரெயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது என அவர் கூறியுள்ளார்.

புதிய பாதை அமைக்கும் பணியுடன், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments