அடல் சுரங்கப்பாதையை திறப்பதற்காக அக்.3 ஆம் தேதி பிரதமர் மோடி மணாலி வர வாய்ப்பிருப்பதாக தகவல்

0 2724
அடல் சுரங்கப்பாதையை திறப்பதற்காக அக்.3 ஆம் தேதி பிரதமர் மோடி மணாலி வர வாய்ப்பிருப்பதாக தகவல்

அடல் சுரங்கப்பாதையை திறப்பதற்காக அக்டோபர் 3 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி மணாலி வர வாய்ப்புள்ளதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மணாலி-லே இடையே சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடல் என்று பெயரிடப்பட்டுள்ள இதன் மூலம் இந்திய வீரர்கள் லடாக் எல்லையை விரைவாக சென்றடைய முடியும்.

10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணி முடிவடைந்துள்ளதால், தற்போது திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர், சுரங்கப்பாதையை திறக்க வரும் 3 ஆம் தேதி பிரதமர் மோடி மணாலி வர வாய்ப்புள்ளதாக கூறினார்.

அப்போது லாகுல் பகுதிக்கும் பிரதமர் செல்ல திட்டமிடப்பட்டுள்ள போதிலும், இன்னும் பயணத்திட்டம் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments