இந்திய ராணுவத்திற்கு உதவ இருக்கும் 2 திமில்கள் கொண்ட ஒட்டகங்கள்

0 2887
இந்திய ராணுவத்திற்கு உதவ இருக்கும் 2 திமில்கள் கொண்ட ஒட்டகங்கள்

இந்தியா - சீனா எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு லடாக்கில் இரண்டு திமில்கள் கொண்ட ஒட்டகங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ள இந்திய ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக டிஆர்டிஒ எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் 170 கிலோ எடையை 12 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து செல்லும் திறன் அந்த ஒட்டகங்களுக்கு இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 திமில்கள் கொண்ட ஒட்டகங்கள் தற்போது குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், இனப்பெருக்கம் செய்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி இந்திய ராணுவத்தில் விரைவில் இணைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments