பிரபல ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி மீது ரூ.1400 கோடி வங்கி மோசடி வழக்கு
பல வங்கிகளிடம் 1400 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான குவாலிட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகளிடம் இருந்து போலி ஆவணங்கள் மூலம் இந்த கடனை குவாலிட்டி நிறுவனம் பெற்றுள்ளதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. குவாலிட்டி நிறுவன இயக்குநர்கள் சஞ்சய் டிங்க்ரா, அருண் ஸ்ரீவாத்சவா ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேங்க் ஆப் பரோடா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, டெல்லி, புலந்தஷார், சகாரன்பூர், அஜ்மீர் உள்ளிட்ட நகரங்களில் குவாலிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
Comments