மத்திய போலீஸ் படையில் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல்
மத்திய காவல் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்து பூர்வ கேள்விக்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், எல்லை பாதுகாப்பு படையில் 28,926 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26,506 பணியிடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பியில் 18,643 பணியிடங்கும், இந்தோ திபேத் படையில் ,5,784 பணியிடங்களும், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 7,328 பணியிடங்களும் காலியாக உள்ளன என்றார்.
பணி ஓய்வு, பணி விலகல் மற்றும் இறப்பு காரணமாக பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதில் 60,210 காவலர் பணியிடங்களுக்கும், 2534 சப்- இன்ஸ் பெக்டர் பணியிடங்களுக்கும் பணியாளர் தேர்வு வாரியம் மூலமும், 330 உதவி கமாடெண்ட் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலமும் ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
Comments