மகாராஷ்ட்ராவில் முட்டையின் தேவை 25 விழுக்காடு அதிகரிப்பால், முட்டை விலை உயர்வு

0 1083
கொரோனா சூழலில், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்பதால் மகாராஷ்ட்ராவில் முட்டையின் தேவை 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா சூழலில், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்பதால் மகாராஷ்ட்ராவில் முட்டையின் தேவை 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

முட்டையில் புரதச் சத்து அதிகமுள்ளதாகவும், அதனால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டதால் முட்டை விற்பனை அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள புனேயில் ஒருநாளைக்கு 35 லட்சம் முதல் 40 லட்சம் வரை முட்டைகள் தேவை என்கிற நிலையில், இப்போது 25 லட்சம் முட்டைகளையே பண்ணைகள் வழங்கி வருகின்றன.

இதனால் ஒரு முட்டையின் விலை 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், பொட்டலத்தில் அடைக்கப்பட்ட முட்டையின் விலை 7 ரூபாய் ஐம்பது காசுகளாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments