தடுமாறி பின்னுக்கு சென்றவருக்காக வெற்றி வாய்ப்பை விட்டுக்கொடுத்த வீரர்
ஸ்பெயினில் நடந்த மாரத்தானில் இறுதிக் கோட்டிற்கு அருகில் சென்ற போதிலும், தனது போட்டியாளர் வெற்றி பெற வழிவிட்ட வீரருக்கு பாராட்டுகள் குவிந்தன.
பார்சிலோனாவில் நடந்த மராத்தானில் ஸ்பெயின் வீரர் டியோகோ மென்ட்ரிகாவுக்கு முன்னாள் சென்றுக் கொண்டிருந்த பிரிட்டிஷ் தடகள வீரர் ஜேம்ஸ் டீகல், ஒரு வளைவில் திரும்பும்போது தடுமாறியதால் பின்னுக்குள் தள்ளப்பட்டார்.
இதைக் கண்ட மென்ட்ரிகா வெற்றிக் கோட்டை கடக்காமல் ஜேம்ஸ் டீகலுக்கு வழிவிட்டார். இதனால், மரத்தானில் 3வது இடத்தை பிடித்து டீகல் வெண்கலப் பதக்கத்தை வென்றார். டியாகோ மென்ட்ரிகாவின் தன்னலமற்ற இந்த செயல், சமூகவலைதளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்றது.
Comments