மகாராஷ்டிர அரசு எப்போதும் என்னை பற்றியே சிந்திக்கிறது: கங்கனா ரணாவத்
மகாராஷ்டிர அரசு எப்போதும் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பதாக இந்தி நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.
பிவான்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கங்கனா கங்கனா என்று தம்மை பற்றி மட்டுமே மகாராஷ்டிர அரசு சிந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தம்முடன் மோதுவதை நிறுத்தினால்தான் ஒட்டுமொத்த மாநிலமும் சரிந்து கொண்டிருக்கிறது என்பதை மகாராஷ்டிர அரசால் தெரிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments