இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர்க் கப்பலில் பெண் அதிகாரிகள்
இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர்க் கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்திய கடற்படையில் பல்வேறு பொறுப்புகளில் பல பெண்கள் பணி புரிந்தாலும், நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதாலும், கழிவறை உள்ளிட்ட பெண்களுக்கான தனிப்பட்ட வசதிகளை போதிய அளவு இல்லாததாலும் போர்க் கப்பல்களில் பணியமர்த்தப்படுவதில்லை.
இந்த நிலைக்கு முடிவுகட்டி, முதல் முறையாக துணை லெப்டினென்ட்கள் குமுதினி தியாகி, ரித்தி சிங் ஆகியோர், போர்க் கப்பல்களில் அதிகாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்பட உள்ள, புதிய MH-60 R ஹெலிகாப்டர்களில் சென்சார்களை கையாளுதல் உள்ளிட்டவற்றிற்காக இருவருக்கும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments