காஞ்சியை அலற வைத்த ரவுடிகள் கோவாவில் கதறல்... 20 பேரை கொத்தாக அள்ளிய போலீஸ்!

0 11808
ரவுடிகள் தியாகு மற்றும் திகேனஷ்

ற்கொலை செய்துகொண்ட ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ், தியாகு உள்ளிட்ட தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 20 பேர் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வசித்து வந்தவன் பிரபல ரவுடி ஸ்ரீதர். இவன் மீது கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சீபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றான். கம்போடியா நாட்டில் தலைமறைவாக இருந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்த ஸ்ரீதரின் தம்பிகளுக்குள் அண்ணனின்  இடத்தை பிடிக்க போட்டி எழுந்தது. ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், உறவினர் தணிகா, பொய்யாக்குளம் தியாகு ஆகியோர் தனித் தனிக்குழுக்களாக ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தனர். இதன் விளைவாக செய்யாற்றில் சதீஷ் காஞ்சிபுரம் வணிகர் தெருவில் கருணாகரன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில்  தினேஷ் தனது அடியாட்களை ஏவிவிட்டு, ரவுடி தணிகாவின் கூட்டாளிகளான கோபி, ஜீவா ஆகியோரை பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தான்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், தியாகு உள்ளிட்ட ரவுடிகள் கோவா மாநிலத்தில் ஒன்று கூடியதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா தலைமையிலான மாவட்ட தனிப்படை போலீஸார் கோவாவுக்குச் சென்றனர். அங்கு லாட்ஜிகளில் அதிரடி சோதனை நடத்தியதில் பதுங்கியிருந்த தினேஷ், தியாகு, கார்த்திக், ராஜேஷ், மணிகண்டன், டேவிட், ராஜா, சதீஷ் ,விக்னேஷ், மணிமாறன், துளசிராம், கடலூர் ரவுடி சுரேந்திரன் உள்ளிட்ட 20 பேர்  சிக்கினர். தற்போது, பிடிபட்ட ரவுடிகள் அனைவரும் காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஆன்மீக பூமியான காஞ்சிபுரத்தில் இனிமேல் ரவுடிகளை தலையடுக்க விடக் கூடாது என்று போலீஸருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments