ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து - தமிழக அரசு ஆணை
ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேரை தலைமைச் செயலர் அந்தஸ்திற்கு உயர்த்தி அவர்களை பல்வேறு துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஐஏஸ் அதிகாரிகளான விபு நாயர், பணீந்திர ரெட்டி, சாய்குமார், சிவசங்கரன், டிஎஸ் ஜவஹர் ஆகியோர் பணி உயர்வு பெற்றுள்ளனர். விபு நாயர் டான்சி தலைவராகவும், பணீந்திர ரெட்டி வருவாய் நிர்வாக ஆணையாளராகவும், சாய்குமார் முதலமைச்சரின் செயலாளராகவும், சிவசங்கரன் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி ஆணையாளராகவும், டிஎஸ்.ஜவஹர் போக்குவரத்து ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments